திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சிறப்பு அமர்வு, அரூப் ராயை ஒருமனதாகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இந்த நடவடிக்கைகள் கட்சியின் அரசியலமைப்பு விதிகளின்படியே மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்படும். நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ். விதிகளின்படியே நாங்கள் செயல்பட்டு இந்தச் சிறப்பு அமர்வைக் கூட்டியுள்ளோம்.
எது சரி அல்லது தவறு என்பதைத் தீர்மானிப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. விரைவில் மாவட்டக் குழுக்கள், மாநிலப் பிரிவு மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் குழு ஆகியவற்றை நாங்கள் அமைப்போம். கட்சியின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரை நியமிக்கவிருக்கிறோம். மம்தா பானர்ஜி தலைமை ஆலோசகராக இருக்க விரும்பினால், அவரை மனதார வரவேற்கிறோம். ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சியின் சின்னம் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வ திரிணாமுல் தலைமை, அதிருப்திக் குழுவுடன் தொடர்புடைய பல தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியது. வேண்டுமென்றே கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஃபிர்காத் ஹக்கீம், அரூப் பிஸ்வாஸ், ஆரூப் ராய், ஜாவேத் கான், ரதின் கோஷ், பிப்லப் மித்ரா, ஸ்னேஹாசிஸ் சக்ரவர்த்தி, சபினா யாஸ்மின் மற்றும் பிறருக்குக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் கோரும் நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது.