
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. ஏப். 29 மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் சில கருத்துக்கணிப்புகள் திமுக ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளன.ஆனால் 130 முதல் 140 தொகுதி வரை மட்டுமே வெற்றி வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
இதனால் திமுக பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சந்தேகம் நிலவுகிறது. இதனிடையே சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகளையும் அவர் சந்தித்துப் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் வருகை தந்த ஸ்டாலின். அங்கு, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். .
இந்த ஆலோசனையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள், முகவர்கள் செயல்பாடு உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி, இரா.இராஜேந்திரன், வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன், தே. மதியழகன், க. சுந்தர், தோப்பு வெங்கடாசலம், நிவேதா எம். முருகன், வசந்தம் கார்த்திகேயன், என். நல்லசிவம், எம். சிவபாலன், ஈ. இராஜா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.