“மோகன்லால் அங்கிள் மகளாக நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று..” – எஸ்தர் அனில் |”That I would be the right fit to play Mohanlal Uncle’s daughter…” — Esther Anil

Spread the love

அவர், “நான் 2010-ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக என் திரைப்பயணத்தைத் தொடங்கினேன். ஆங்காங்கே சில படங்களில் நடித்து, பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு என் வாழ்க்கை மாறியது. ஆம், அப்போதுதான் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் வெளியானது.

அந்தத் திரைப்படம் எல்லாவற்றையுமே மாற்றியமைத்தது. இந்திய அளவில் இருக்கும் ஒட்டுமொத்த சினிமா பார்வையாளர்களிடமும் என்னை அது கொண்டுபோய்ச் சேர்த்தது.

நான் என் கனவிலும் நினைத்துப் பார்க்காத கதவுகளை எனக்காக அது திறந்து வைத்தது. சொல்லப்போனால், சினிமாவில் என்னுடைய பயணத்தை மாற்றியதை விடவும், என்னுடைய சொந்த வாழ்க்கையையே பல வழிகளில் அப்படம் மாற்றியமைத்தது. இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு ‘த்ரிஷ்யம் 3’ வந்திருக்கிறது.

எஸ்தர் அனில் - த்ரிஷ்யம்

எஸ்தர் அனில் – த்ரிஷ்யம்

இந்தத் தருணத்தில் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு, ஆர்வம், வாழ்த்துகள், ஒரு சிறிய பதற்றம் என எல்லாம் கலந்த ஒரு மனநிலையில் இருக்கிறேன்.

ஆனால், இவை அனைத்தையும் விட இப்போது என் மனதில் நன்றியுணர்வு மட்டும்தான் அதிகமாக நிறைந்திருக்கிறது. ஜீத்து ஜோசப் அங்கிளை நாங்கள் சந்தித்த அந்த மறக்க முடியாத இரவுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

அவர்தான் லால் அங்கிள் மகளாக நடிக்க நான் சரியாக இருப்பேன் என்று என்னை நம்பித் தேர்ந்தெடுத்தார். என்னுடைய இந்தப் பாதையை வடிவமைத்த அந்த அதிர்ஷ்டத்திற்கும், சரியான நேரத்திற்கும் மற்றும் பல மனிதர்கள் எடுத்த நல்ல முடிவுகளுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *