இந்தியப் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த திங்கட்கிழமை (மே 18), நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் மோடி மற்றும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது நார்வே நாட்டைச் சேர்ந்த ஹெல் லிங் (Helle Lyng) என்கிற பத்திரிகையாளர் மோடியிடம், “உலகின் மிக சுதந்திரமான பத்திரிகைகளிடமிருந்து சில கேள்விகளை எடுத்துக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.
ஆனால், மோடி எந்தப் பதிலும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. உண்மையில் அவர் பதிலளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.
உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index) நார்வே முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவோ பாலஸ்தீனம், அமீரகம் மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு 157-வது இடத்தில் இருக்கிறது.
நாம் யாருடன் இணைந்து செயல்படுகிறோமோ, அந்த அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்பதுதான் நமது வேலை”
ஹெல் லிங்கின் இந்தப் பதிவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் ரீஷேர் செய்துள்ளார்.