நாடு முழுவதும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களில், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் பல்வேறு பயிற்சித் திட்டங்களில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து தகுதி பெற்ற 165-க்கும் மேற்பட்ட மாணவர்களில், 125-க்கும் மேற்பட்டோர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் மு. பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச நேர்முகத் தேர்வுப் பயிற்சி
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்காக, கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நவம்பர் 10 முதல் மூன்று மாதங்களுக்கு இலவச சிறப்பு நேர்முகத் தேர்வுப் பயிற்சி நடைபெறவுள்ளது.
முன்னாள் யுபிஎஸ்சி தலைவர் பேராசிரியர் டி.பி. அகர்வால் அவர்களின் வழிகாட்டுதலில், 13-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த நிர்வாக வல்லுநர்கள் நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களாகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கவுள்ளனர். நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த டாக்டர் மு. பூமிநாதன், அவர்கள் இறுதிக்கட்டத் தேர்விலும் சிறப்பாகச் செயல்பட்டு குடிமைப் பணிகளில் இடம்பெறத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.