பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ் அன்புமணியைக் கட்டிப் பிடித்து கண்கலங்கியதும், அதன் பிறகு அன்புமணி உள்ளிட்டவர்கள் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோக் காட்சிகளும் வெளியானது.

ராமதாஸ் - அன்புமணி

ராமதாஸ் – அன்புமணி

அதையடுத்து அங்கிருந்து பனையூர் கிளம்பிய அன்புமணியிடம், `இரண்டு அணிகளாக இருந்த பா.ம.க ஒன்றாக இணையுமா?” என்று எழுப்பிய கேள்விக்கு, `இனி நல்லதே நடக்கும்’ என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அதன்பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க.வின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, “இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை மருத்துவர் அன்புமணி அவர்கள் சந்தித்துப் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தச் சந்திப்பை மனதார வரவேற்கிறேன். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பா.ம.க தமிழ்நாட்டில் வலிமையான, தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததை நாடு அறியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *