அந்த ஆடியோ விழா பற்றி ஆலோசிக்க எப்போதும் சென்னையில்தான் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவோம். ஆனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என ஓம் படத்தின் ஆடியோ விழா குறித்து ஆலோசிக்க கோவையில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினோம். இப்போது வரை எங்களின் மன்றத்தை 58 மாவட்டங்களாக பிரித்திருக்கிறோம்.
58 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் என 2500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஓம் படத்தின் ஆடியோ விழா பற்றியும் அடுத்தக்கட்ட நலத்திட்ட நிகழ்வுகள் பற்றியும் முக்கியமாக பேசினோம். தலைமையின் உத்தரவின் பேரில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் என்பதை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறோம். மன்றத்தின் கொடியிலும் சில மாற்றங்களை செய்து புதிய கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ரசிகர்களை மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகளை நோக்கி நகர்த்த இது உதவுமென நம்புகிறோம். மிக கவனமாக ரசிகர்களை நல்வழிப்படுத்தும்படி கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்றனர்.