தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குக் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் “பவர்’ (அதிகாரப் பத்திரம்) அளித்திருந்தார். பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அந்தப் பவரை அவர் ரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி ராஜேந்திரன் அந்த நிலத்தைத் தனது மனைவி ஆனந்தஜோதி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் விதியை மீறி முறைகேடாக பத்திரம் செய்து கொடுத்து ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாயம் அடைந்துள்ளார் என்கிறார்கள்.