மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் 10 நாட்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த அவரை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் தொடர் தலையீட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி அவர் பாதுகாப்பாக மதுரை வந்து சேர்ந்தார்.

மாணவியை மீட்க உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை நேரில் சந்தித்து எங்கள் உயிர் இருக்கும் வரை உங்களை மறக்க மாட்டோம் என்று பெற்றோர் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.