மகேந்திரனுக்கு பட்டுக்கோட்டை தொகுதி கிடைக்காதது காங்கிரஸ் வட்டத்தில் பேசு பொருளானது. தலைமை எடுக்கும் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக மகேந்திரனும் அப்போது பேசியிருந்தார். இந்நிலையில் பிரசாரத்திற்கு துறையூர் வந்த ராகுல்காந்தியை மகேந்திரன் நேரில் சென்று சந்தித்தார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நேற்று தான் ராகுலை சந்தித்த நிலையில், அப்போது, `கவலைபடாதே மகேந்திரன் பொறுமையாக இரு” என்று உரிமையோடு ஆறுதல் சொல்லியுள்ளார். இதனை முகநூலில் நெகிழ்ச்சியுடன் மகேந்திரன் பதிவிட்டுள்ளார்

இதுகுறித்து மகேந்திரனிடம் பேசினோம், “நான் மதிக்கும் தலைவர் என்னிடம் சொன்ன அந்த ஒரு வாத்தையில் நான் நெகிழ்ந்தேன். என்னைப் பொறுத்தவரை சீட்டுக்காக நான் கட்சியில் இல்லை, தலைவர் ராகுல்காந்திக்காக கட்சியில் இருக்கிறேன். அவரிடமிருந்து வெளிவந்த அந்த வார்த்தையில், எவ்வளவு பெரிய தலைவர், நானெல்லாம் அவருக்கு பொருட்டே இல்லை ஆனால் நமக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து அக்கறையுடன் பேசுகிறாரே என நெகிழ்ந்துவிட்டேன். அவரது பேச்சு ஆயிரம் மடங்கு வேகமாக என்னை ஓட வைப்பதற்கான ஊக்கத்திற்கு காரணமாகி வித்திட்டுள்ளது” என்றார்.