ராமநாதபுரம்: சமஸ்தான வாரிசு உரிமை யாருக்கு? – முதல் மரியாதை சர்ச்சையால் தடைபட்ட விஜயதசமி ஊர்வலம்!

Spread the love

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தங்கள் குலதெய்மாக ராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதற்கென ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்வான அசுரனை அம்புவிட்டு வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறும்.

இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு அம்மன் அம்புவிடுவதற்காக அரண்மனையில் இருந்து புறப்பாடு ஆகியது. அப்போது ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் வாரிசுகளுக்கும், மறைந்த ராஜா குமரன் சேதுபதி வாரிசுகளுக்கும் இடையே ஊர்வலத்தை துவக்கி வைக்கும் உரிமை குறித்து பிரச்னை எழுந்தது.

ராமநாதபுரம் அரண்மனை

ராமநாதபுரம் அரண்மனை
உ.பாண்டி

ராஜ ராஜேஸ்வரி அம்மன்

ராஜ ராஜேஸ்வரி அம்மன்
உ.பாண்டி

இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மன் ஊர்வலம் செல்லாமல் மீண்டும் அரண்மனை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே அம்பு விடும் நிகழ்வு நடந்தது. இதனால் அரண்மனைக்கு வெளியேயும், அம்மன் வழக்கமாக அம்பு விடும் மகர்நோன்பு பொட்டலிலும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *