” ‘ராமாயணா’ படத்திற்காக 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்!” – ஏ.ஆர். ரஹ்மான் |ar-rahman-reveals-he-turned-down-10-12-films-for-ramayana-movie

Spread the love

அவர் பேசுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் ‘ராமாயணா’ படத்தின் இசை மற்றும் தீம் மியூசிக் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இதில் இடம்பெற்றுள்ள சில பாடல்களும் இசைக் கோர்ப்புகளும் 12 முதல் 13 வெர்ஷன்கள் வரை உருவாக்கப்பட்டன.

குறிப்பாக, ‘ராவண தாண்டவம்’ பாடல் மட்டும் 12-13 வெர்ஷன்கள் போடப்பட்டு, இறுதியாக அனைவருக்கும் பிடித்த ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்தப் படத்தின் இசை உருவாக்கப் பயணம் மிகவும் அழகானதாக இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

‘ராமாயணா’ படத்தின் உலகத்திற்குள்ளேயே முழுமையாக மூழ்கியிருக்க வேண்டும் என்பதற்காக, சுமார் 10 முதல் 12 திரைப்படங்களை நான் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன்.

அதில் பல முக்கியமான, பெரிய இயக்குநர்களின் திரைப்படங்களும் அடங்கும். ஆனால், அந்த முடிவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

ஒரு கதையை நான் உண்மையிலேயே நேசித்து, ரசித்துப் பணியாற்றும்போதுதான் அந்தப் படத்தை ஒப்புக்கொள்வேன்.

அப்படிப்பட்ட படங்கள்தான் என் கலை உணர்வுக்குத் தீனி போடுவதோடு, என் ஒட்டுமொத்தக் குழுவையும் உற்சாகமாக வைத்திருக்கும்” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *