ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

Spread the love

முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்

முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்
உ.பாண்டி

முன்னதாக அக்னிதீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். இவர்கள் அதிகாலை முதலே கடலில் நீராடி, மறைந்த தங்கள் முன்னோர்கள் பெயரில் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடியதுடன் சாமி தரிசனமும் செய்தனர். சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பெருமளவில் குவிந்ததால் இன்று கட்டணம் ஏதும் இன்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் மற்றும் அக்னிதீர்த்தம, தனுஷ்கோடி ஆகியவற்றில் குவிந்த பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் போலீஸார் மேற்கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *