ரூ.0.01 விலைப்புள்ளி: தங்க மோதிர திட்டம் குறித்து ஜாய் ஆலுக்காஸ்|TN Gold Ring Scheme: Joyalukkas Responds Amid Political Row

Spread the love

வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ அமலுக்கு வர இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையும், கல்யாண் ஜுவல்லர்ஸும் பெற்றுள்ளன.

‘தாய் மாமன் தங்க மோதிரம்’

‘தாய் மாமன் தங்க மோதிரம்’
சித்தரிப்புப் படம்

ஜாய் ஆலுக்காஸும், கல்யாண் ஜுவல்லர்ஸும்

இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்துச் செய்கூலி, காப்பீடு, போக்குவரத்து, BIS-தரமுத்திரை போன்ற அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் என்ற நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்திருந்தது.

அடுத்ததாக, ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்கக் கோரியதில் கல்யாண் ஜுவல்லர்ஸ் மட்டுமே இசைவு தெரிவித்திருந்தது.

ஆகையால், இந்த இரு நிறுவனங்களுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான டெண்டர் சென்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *