TVK- வில் இணைய 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ- க்கள் ரெடி! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி -minister sengottaiyan controversy speech about 10 admk mla’s.

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ” தமிழ்நாட்டின் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை முதலமைச்சர் விஜய் படைத்துள்ளார். தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அவர், நல்ல ஆலோசனைகளை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

`ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுத்தார்கள. இப்போது ஜனநாயகத்தைக் காக்கும் தலைவராகவே விஜய் வந்துள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ஆட்சி அமைக்க 118 பேருடன் வாருங்கள் என்று ஆளுநர் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

47 பேரை வைத்துக்கொண்டு ஒருவரை முதலமைச்சர் என்று சொன்னால் 108 பேரை வைத்துக்கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா? தி.மு.க- வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்து முதலமைச்சராகத் திட்டமிட்டால் நாங்கள் விடுவோமா?

நமது ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்தால் வரும் காலங்களில் 234 தொகுதிகளிலும் த.வெ.க வெற்றி பெறும். ஏற்கனவே அ.தி.மு.க- விலிருந்து 6 எம்.எல்.ஏ- க்கள் விலகி த.வெ.க – விற்கு வந்துவிட்டனர். மேலும் 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ -க்கள் த.வெ.க- வில் இணைய ரெடியாக உள்ளனர். மொத்தமாக 25 எம்.எல்.ஏ- க்கள் இங்கு வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள். பலரும் த.வெ.க- வில் இணைந்து வருவதால் சில கட்சிகளில் தலைவர்கள் மட்டுமே இருப்பார்கள். வேறு யாரும் இருக்க மாட்டார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *