`ரூ.15 கோடி தொழில் வேண்டாம்’ – மனைவி, மகள்களுடன் ஜெயின் மத துறவியாகும் சூரத் தொழிலதிபர் | A Surat businessman decides to abandon his Rs. 15 crore business and become a Jain monk

Spread the love

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் திடீரென ஜெயின் மத சன்னியாசிகளாக மாறிவிடுவதுண்டு. சில நேரங்களில் சிறுமிகள் கூட ஜெயின் மத துறவியாகிவிடுவதுண்டு. புதிதாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தனது குடும்பத்தோடு ஜெயின் மத துறவியாக மாற முடிவு செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அத்தொழிலதிபர் பல ஆண்டுகளுக்கு முன்பு சூரத் வந்து தொழில் செய்து வருகிறார். திலிப் பாய் போகர் என்ற அந்த தொழிலதிபர் தனது குடும்பத்தோடு ஜெயின் துறவற வாழ்க்கையைத் தழுவ உள்ளார். சூரத்தில் அவர் ஆண்டுக்கு ரூ.15 கோடி டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார்.

அவர் தனது மனைவி ஜோதி பென்(45), மற்றும் அவர்களது மகள்கள் சாவி, மற்றும் சார்வி ஆகியோருடன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி சூரத்தில், ஜெயின் துறவற வாழ்வில் தீட்சை எடுக்கவுள்ளார். ஏற்கனவே அவர்களின் மற்றொரு மகளான ஷைலி, 2023ம் ஆண்டு தீட்சை எடுத்து, இப்போது சாத்வி தர்ஷிதா என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார். திலீப் பாய் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜஸ்வந்த்கர் கிராமத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு சூரத்திற்கு குடியேறினார்.

அங்கு அவர் ஒரு சிறிய கடையில் துணி விற்கத் தொடங்கினார். வியாபாரம் பெருகவே மேலும் இரண்டு கடைகளைத் திறந்து பல இயந்திரங்களை நிறுவினார். அவர் தனது தொழிலை விரிவுபடுத்த நினைத்திருந்த நேரத்தில் ஜெயின் மத ஆச்சார்யா ஒருவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு ஜெயின் மதத்தின் மீதான அவரது ஆர்வத்தை அதிகரித்தது. அதோடு அவரை துறவற வாழ்க்கைக்கு இழுத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *