தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்
கேள்வி: சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பை அவர் ஏற்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளதே?
பதில்: அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் எங்களுடைய விருப்பம். அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
கேள்வி: ஆனால், அழைப்பு வந்ததா சார்?
பதில்: அது குறித்துத் தெரியவில்லை; விசாரித்துத்தான் சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து எங்களுக்கு அழைப்பு வந்திருக்கலாம். ஏனெனில், சோனியா காந்தியைப் பொறுத்தவரையில் ‘தளபதி’ மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நாங்களும் அவரை மதிக்கிறோம். எனவே, எங்கள் மரியாதை என்பது வேறு; நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது வேறு. எங்களுடைய வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோம். இது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை.

கேள்வி: மேகதாது பிரச்னை மற்றும் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து…
பதில்: டெல்லிக்குச் சென்றவர் மேகதாது பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. இன்று அதுதான் எல்லோருடைய பேச்சாகவும் இருக்கிறது. கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் மிகவும் தைரியமாகப் பேசுகிறார். எந்தத் தைரியத்தில் அப்படிப் பேசுகிறார் என்றால், இங்கே ஒரு அரசாங்கமே இல்லை என்ற எண்ணத்தில்தான். ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முயன்று விபத்தில் சிக்குவது போன்ற பரிதாப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. டெல்லிக்குச் செல்கிறார், காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்கிறார், ராகுல் காந்தியைச் சந்திக்கிறார். ஆனால், மேகதாது பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.
கேள்வி: மாணிக்கம் தாகூர் குறித்து…
பதில்: மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கொள்கை பரப்புச் செயலாளராக ஆகிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.