ரோபோடிக் அறுவை சிகிச்சை: ‘ரோபோ கனெக்ட் புதுச்சேரி’ – நிபுணர்களை அறிமுகம் செய்த அப்போலோ| Apollo introduces experts under ‘Robot Connect Puducherry’

Spread the love

ரோபோடிக் அறுவைசிகிச்சை பலவிதமான சிகிச்சைகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், ஒரே ஒரு ரோபோடிக் அமைப்பை மட்டும் சார்ந்திராமல், பல்வேறு தளங்களை அப்போலோ மருத்துவமனை பயன்படுத்துகிறது. இதனால் அறுவைசிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் மருத்துவத் தேவைக்கு ஏற்ற சரியான தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இந்த அணுகுமுறையானது, நோயாளியின் பாதுகாப்பு, மருத்துவப் பலன்கள் மற்றும் நோயாளியின் தனிப்பட்ட தேவைகளை மையமாகக் கொண்டு அறுவைச் சிகிச்சை குறித்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

‘ரோபோ கனெக்ட்’ மூலம், சென்னை மற்றும் புதுச்சேரி மருத்துவர்களுக்கிடையேயான மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அறிவுப் பகிர்வை மேம்படுத்தவும், துல்லியமான அறுவைசிகிச்சை முறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதையுமே அப்போலோ மருத்துவமனை இலக்காகக் கொண்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனைகள் குறித்து: இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையைத் தொடங்கினார். 78 மருத்துவமனைகளில் 10,900 படுக்கைகள், 7200+ மருந்தகங்கள், 300 கிளினிக்குகள், 2,500 நோயறிதல் மையங்களுடன் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநராக அப்போலோ குழுமம் இப்போது வளர்ந்துள்ளது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள், 2,00,000-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள், 30,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை இதுவரை செய்துள்ள அப்போலோ, மேம்பட்ட சிகிச்சையை வழங்க புதிய தொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *