‘வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தை.!’- செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் விளக்கம்| fan explain what happened while taking selfie with dhanush

Spread the love

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் “ஓம்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் ஹைதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியின்போது தனுஷுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை பவுன்சர்கள் தள்ளிவிட்ட போது தனுஷ் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரே விளக்கம் அளித்திருக்கிறார்.

” சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு சிறிய வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தைத் தீர்மானிக்க வேண்டாம். ட்ரோல் செய்வது உங்களுக்குப் பழக்கமாக இருக்கலாம்.

வெறுப்பைப் பரப்புவது உங்கள் விருப்பமாக இருக்கலாம். ஆனால், தன் ரசிகர்கள் மீது அவர் காட்டும் அன்பை மட்டும் யாராலும் அழிக்க முடியாது. நீங்கள் எந்த அளவுக்கு வெறுப்பைக் காட்டுகிறீர்களோ, அதைவிட அதிகமாக எங்கள் அன்பும், அபிமானமும் அதிகரிக்கும். ஏனென்றால், தலைவர் யார் என்று எங்களுக்கு தெரியும். வீ லவ் யூ தலைவா… ஃபாரெவர்” என்று வீடியோ மூலம் விளக்கமளித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *