லண்டனில் அஜித்தின் கார் ரேஸ்: அஜித்துக்கு, விஜய் கொடுத்த நினைவு பரிசு | CM Vijay Flags Off Ajith’s Le Mans Race in London; Viral Photos Out!

Spread the love

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற “லீ மேன்ஸ்’ கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய் இந்தக் கார் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டு, பந்தயத்தையும் தொடங்கி வைத்தார். ரேஸ் தொடங்குவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாகவே ரேஸிங் நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்த விஜய், அஜித்தைச் சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

அங்கு இருவரும் ரசிகர்களை நோக்கிச் கையசைத்த வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. அதற்குப் பிறகு ரேஸ் டிராக்கில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து, பந்தயத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பந்தய முடிவிற்குப் பிறகு ரேஸ் குறித்து அஜித்குமார், முதல்வர் விஜய்க்கு விளக்கமளித்தார். பின்னர், விஜய்யும் ரேஸிங் சூட் ஒன்றை அணிந்துகொண்டு அஜித்துடன் இந்தியக் கொடியைப் பிடித்தவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *