லிப்ட் கேட்ட 16 வயது மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; நள்ளிரவில் ஓடும் பஸ்ஸில் நடந்த கொடூரம் | 16-year-old student gang-raped in AC bus after being given a lift at midnight

Spread the love

டெல்லி காஷ்மேரா கேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் 16 வயது பெண் ஒருவர் அந்த வழியாக வந்த பஸ் ஒன்றை மறித்து லிப்ட் கேட்டார்.

நொய்டாவிற்குச் செல்லுமா என்று அப்பெண் கேட்டார். பஸ்ஸில் இருந்தவர்களும் பஸ் நொய்டாதான் செல்கிறது என்று கூறி அப்பெண்ணை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டனர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ் டிரைவரும், நடத்துனரும் சேர்ந்து மாறி மாறி அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பஸ்ஸை 47 கிலோ தூரம் ஓட்டிச்சென்று இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். பஸ் சிலீப்பர் வசதி கொண்டது ஆகும். எனவே ஜன்னல் திரைச்சீலையால் மூடப்பட்டு இருந்தது. இதனால் உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது.

இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு அப்பெண்ணை சாலையோரம் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உடனே அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், வீட்டில் இருந்தவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு வீட்டில் சொல்லாமல் நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வந்துள்ளார்.

வரும்போது கனமழை பெய்து கொண்டிருந்ததால் தவறுதலாக டெல்லி பாரி சோக் பகுதியில் இரவு நேரத்தில் இறங்கி இருந்தார். அந்த நேரத்தில் லிப்ட் கேட்டபோது அந்த வழியாக வந்த பஸ்சில் இருந்த இருவர் லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பஸ்ஸை அதில் இருந்தவர்கள் பழுதுபார்த்துவிட்டு திமர்பூர் என்ற இடத்திற்கு டிரைவரும், நடத்துனரும் எடுத்து சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

மாணவி ஊரில் 11வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் குல்தீப் மற்றும் சந்தீப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *