லோ BP பிரச்னை… உணவுகளின் மூலம் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாமா? | Low BP problem… Can blood pressure levels be increased through food?

Spread the love

எதைத் தவிர்க்க வேண்டும்?

உணவு வேளைகளைத் தவிர்ப்பதையோ அல்லது நீண்ட நேரம் பசியுடன் இருப்பதையோ தவிர்க்கவும்.

மது அருந்துவதைத் தவிருங்கள். ஏனெனில் அது ரத்த அழுத்தத்தைக் குறைத்து நீரிழப்பை ஏற்படுத்தும்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக,  சாப்பிட்ட பிறகு உங்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டால் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான காபி, டீ உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தினாலும், குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது  நம்பகமான வழி அல்ல.

உட்கார்ந்திருக்கும் அல்லது படுத்திருக்கும் நிலையிலிருந்து திடீரென்று எழுந்திருப்பதைத் தவிர்க்கவும்.   இது தலைச்சுற்றலைத் தூண்டக்கூடும்.

அதிகப்படியான காபி, டீ உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தினாலும், குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது  நம்பகமான வழி அல்ல.

அதிகப்படியான காபி, டீ உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தினாலும், குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இது நம்பகமான வழி அல்ல.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

குறைந்த ரத்த அழுத்தத்துடன் அடிக்கடி தலைச்சுற்றல், மயக்கம், தொடரும் சோர்வு அல்லது படபடப்பு ஆகியவை இருந்தால், அதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய மருத்துவரை அணுகவும். நீரிழப்பு, ரத்தச்சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், தைராய்டு கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் போன்றவையும் குறைந்த ரத்த அழுத்தத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கு மயக்கம், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது குழப்பம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

குறைந்த ரத்த அழுத்தத்திற்கு எப்போதும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. ஒருவருக்குத் தொடர்ந்து ரத்த அழுத்த அளவு குறைவாக இருந்தாலும், அவர் முழுமையாக நலமாக உணர்ந்தால், அது அவருக்கு இயல்பானதாக இருக்கலாம். ரத்த அழுத்த அளவை மட்டும் வைத்துப் பார்க்காமல், அறிகுறிகள் மற்றும் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

டாக்டர் மது பிரபுதாஸ்:

சென்னை, அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *