வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!’ – எம்.பி ஆ.ராசா கண்டனம்

Spread the love

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு, அதை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை பா.ஜ.க அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி ஆ.ராசா, “வந்தே மாதரம் பாடலுக்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றப் பணிகளுக்கான பிசினஸ் திட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படாமல், மதியம் 3 மணிக்குத் திடீரென்று துணைப் பட்டியலில் கொண்டு வந்தனர். இம்மசோதாவுக்கு நான் ஏற்கெனவே திருத்தம் கொடுத்திருந்தேன். இதில் மிகப்பெரிய அரசியல் சட்ட மோசடி நடைபெற்றுள்ளது.

1950 ஜனவரி 24 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையில், வந்தே மாதரம் பாடல் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முழுப் பாடலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்த மசோதாவில் அரசு தவறாகக் கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *