வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா? | Madurai Vandiyur Teppakulam Dries Up After Five Years

Spread the love

மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட வண்டியூர் தெப்பக்குளம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வறட்சி நிலையை எட்டியிருக்கிறது.

மதுரையில் கி.பி. 1645 ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கரால், இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கக்கூடிய திருமலை நாயக்கர் மஹாலினைக் கட்டுவதற்கு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தேவைப்பட்ட மண்ணை தோண்டி எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய பள்ளம் உருவானது. அப்பள்ளத்தை மூட வேறொரு இடத்திலிருந்து மண்ணைக் கொண்டுவராமல், அதனை அழகிய குளமாக மாற்ற உத்தரவிட்டார். அப்படி உருவானதே மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்

இந்தத் தெப்பக்குளம் 16 ஏக்கர் பரப்பளவில் மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இக்குளத்தின் உட்பகுதியின் சுற்றுப்புறம் கிரானைட் கற்களால் கட்டமைத்து நான்கு பகுதியிலும் 12 நீண்ட படிகள் உள்ளன.

இந்தத் தெப்பக்குளம் மதுரை வண்டியூர் மாரியம்மன் திருக்கோயிலுக்குப் பாத்தியப்பட்டிருந்தாலும் நிர்வாக ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் இக்குளத்தினை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் பாராமரித்து வருகிறது. அத்தோடு ஆண்டுக்கொருமுறை தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவில் மீனாட்சியும் சுந்தரேசுவரரும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி காட்சி தருவது பொதுமக்களிடையே பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்

மதுரை வண்டியூர் தெப்பக்குளம்

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பனையூர் கால்வாய் சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் குழாய்கள் மூலம் வைகை ஆற்று நீர் மீண்டும் குளத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2020 முதல் 2025 வரை தெப்பக்குளத்தில் அடிக்கடி பெய்துவரும் மழையின் காரணமாகவும், வைகையாற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற நீரின் காரணமாகவும் நீர் வற்றாமல் முழு கொள்ளளவான 14 அடியையும் எட்டி நிரம்பி வழிந்தது. அதனால் பாதுகாப்பிற்காக நான்கு படித்துரைகளில் பாதுகாப்புக் கம்பிகளை அமைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *