'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்…' – தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

Spread the love

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் சில இங்கே..

Sanitary Workers Protest
Sanitary Workers Protest

உணவுப்படி ஒரு நாளைக்கு ரூ 50 ரூபாய். அக்டோபர் 1 முதல் வழங்கப்படும்.

பெண்களுக்கான கழிப்பறை ஓய்வறை செப்டம்பர் 30 க்குள் கட்டித் தரப்படும்.

கடந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட, குற்றவியல் வழக்குகள் திரும்ப பெறப்படும்.

மண்டலம் 4, 7, 8 ல் 160 புதிய வாகனங்கள் (BOV) வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலையும் இறப்பு கால இழப்பீடும் வழங்கப்படும்.

மழை காலத்திற்கு முன்பாகவே ரெயின் கோட் வழங்கப்படும். இரண்டு ஆண்டுக்கு 1 ரெயின் கோட் என்ற நடைமுறைக்கு பதில் வருட வருடத்திற்கு 1 ரெயின் கோட் என வழங்கப்படும்.

தினமும் இரண்டு மாஸ்க் வழங்கப்படும். கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கூடுதலாக தரப்படும்.

தூய்மை பணியாளர்கள் நலன் காக்க, தூய்மை பணியாளர்களுக்கான நலவாரிய அலுவலகம் சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்படும். அதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். அதில் அனைத்து தொழிலாளர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் மட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Sanitary Workers
Sanitary Workers

4 மாதத்திற்கு ஒருமுறை ஆணையர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

உழைப்போர் உரிமை இயக்கத்திற்கு சங்க அலுவலகம் தரப்படும்.

பணி நிரந்தரம், வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த நாள் கூலி ரூ 832 ஆகியவை குறித்து அக்டோபர் 3 அன்று நடைபெறும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு காணப்படும்.

விரைவில் தமிழ்நாடு முதல்வருடன் உழைப்போர் உரிமை இயக்க தூய்மை பணியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 3 ஆம் தேதி நடக்குமென்றும் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *