“வாடகை சக்திகளின் துணையில் ஆட்சி நடத்துகிறார் விஜய்!” -அ.தி.மு.க-வின் இன்பதுரை எம்.பி காட்டம் | Vijay government in Tamil nadu has been run by india coalition partners, says inbadurai

Spread the love

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு கிடையாது. சுமுகமான உறவுடன் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி தெரிவித்திருக்கிறார்.

நெல்லையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான ஐ.எஸ்.இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது, “அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பேசியிருக்கிறார். அவர் நினைத்தால் இப்போது கூட விவசாயியாக முடியும். ஆனால், அவர் விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுகிறார். ஒட்டுமொத்த கடனையும் தள்ளுபடி செய்யாமல் நிபந்தனைகளை விதிக்கிறார்.

அதிமுக எம்.பி இன்பதுரை

அதிமுக எம்.பி இன்பதுரை

ஆலங்குளம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மணிகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. `இந்த விபத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை” என்று சொல்லியிருக்கிறார். ஆனால்,அது மக்கள் பணம் அல்லவா? இந்தச் சம்பவத்தைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, மக்கள் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசாகச் செயல்படுகிறது. இந்த தீ விபத்துக்கு அரசே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *