‘ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்’ – முதல்வர் விஜய் பேச்சு குறித்து ஜெயக்குமார் விமர்சனம் | AIADMK’s Jayakumar has criticized Chief Minister Vijay’s speech in Karur.

Spread the love

கரூருக்குச் சென்ற முதலமைச்சர், டெல்டா விவசாயிகளின் முக்கியப் பிரச்னையான குறுவை மற்றும் சம்பா சாகுபடி குறித்துப் பேசாதது ஏன்? ஜூன் மாதக் குறுவை சாகுபடிக்கு 9.90 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்திற்கு 30 டிஎம்சி தண்ணீரும் தேவைப்படும் நிலையில், அதைப் பெற்றுத் தர எந்தவொரு வலுவான முயற்சியையும் முதலமைச்சர் எடுக்கவில்லை.

TNPSC தேர்வுக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் பகல், இரவாகப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தங்களுக்கு வேண்டிய 32 பேருக்கு மட்டும் நேரடியாக அரசுப் பணி வழங்கியிருப்பது நியாயமற்றது. இது தேர்வர்களின் வாய்ப்பைப் பறிக்கும் செயல். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 1958 முதலே தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கினார்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

ஜெயக்குமார் – முன்னாள் அமைச்சர்

ஆனால், 1983-ல் சினிமாவுக்கு வந்த விஜய், கோடி கோடியாகச் சம்பாதித்த பணத்திலிருந்து பாதிக்கப்பட்ட இந்த 32 குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருக்கலாம். அதை விடுத்து அரசுப் பணியை வாரி வழங்கியது ஏன்?

சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கும் கரையான் போன்ற ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஊழலைப் பற்றிப் பேச முதலமைச்சருக்கு எந்த தகுதியும் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *