வாளேந்திய ஆக்ரோஷம்; கஞ்சா பயன்பாடு சர்ச்சை – குருத்வாராவை முற்றுகையிட்ட நிஹாங்க் சீக்கியர்கள் யார்? | Who are the Nihang Sikhs? The warrior order at the centre of the Uttarakhand standoff

Spread the love

கஞ்சாவை நிஹாங்குகள் பயன்படுத்துவது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ராணுவப் பிரசாரங்களுக்காகவும், வலியைக் குறைக்கவும் கஞ்சா பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டதாலும் சீக்கிய அறிஞர்கள் அதனை ஏற்க தயாராக இல்லை.

1880 ஆம் ஆண்டு பிரஜ் பாஷாவில் பாபா சுமர் சிங் எழுதிய வரலாற்று உரையில், குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன் சாஹிப்சாதா ஃபதே சிங் நீல நிற துமல்லா உடையணிந்து ஆயுதங்களுடன் இருந்தார். குரு கோவிந்த் சிங் இந்த தோற்றத்தைப் பாராட்டியதாகவும், அத்தகைய வீரர்களை “நிஹாங் சிங்ஸ்” என்று குறிப்பிடுவதாகவும், நிஹாங்குகள் குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் என்று சிலர் கூறுவதற்கு இதுவே காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரு கோவிந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து சீக்கிய சமூகங்கள் முகலாய ஆட்சியாளர்கள் மற்றும் பின்னர் ஆப்கானிய படையெடுப்பாளர்களின் கீழ் மீண்டும் மீண்டும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டன. அதனை எதிர்கொள்ள ராணுவத் தயார்நிலை சீக்கியர்களுக்கு அவசியமானது. இந்த சூழலில் சீக்கியர்களின் ஆயுதமேந்திய முன்னணிப் படையாக நிஹாங்குகள் உருவானார்கள், சீக்கியர்களை மட்டுமல்லாது குருத்வாராக்கள், அவர்களின் பிறநிறுவனங்களின் பாதுகாப்பதற்கும் நிஹாங்க்கள் உதவியாக இருந்தனர்.

ஒரு நிஹாங்க் எப்போதும் ஆயுதங்களுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போதும் இரும்பு ஆயுதங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டும் என்றும், அவர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது நிஹாங்க்ளின் கொள்கையாகும்.

சீக்கிய காலத்தில் பின்பற்றப்பற்றப்பட்ட வாழ்க்கை நடைமுறை, ஆடை மற்றும் பழக்க வழக்கங்களை இன்றைக்கும் நிஹாங்க் சீக்கியர்கள் பின்பற்றி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *