வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் சமூகப் பங்களிப்பு: குழப்பங்களைத் தீர்க்கும் 5 எளிய வழிமுறைகள்! | My Vikatan article about social charity

Spread the love

சமூக தொழில் முனைவோர் (Social entrepreneur)

இது சமுகப்பயனை முதன்மையாகக்கருதி ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது. பணமும் ,மனமும் மூளையும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொழிலில் வெற்றி காண முடியும். நமது நாட்டிற்கு சமூகத்தொழில் புரிவோர் பலர் தேவைப்படுகிறார்கள். ஏனென்றல் இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி முக்கியமாக சமூகப்பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

கொடையாளி (Philanthropist)

நமது நாட்டின் பல பணக்காரர்கள் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரும் பகுதியை சமூகத்திற்கு உபயோகமான முறையில் செலவிடுவதற்காக நேரிடையாகவோ அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடங்கியோ நடத்தி வருகிறார்கள். இவர்கள் நிச்சயம் கொடையாளிகளாகக் கருதப்படுவார்கள். திரு. நாராயணமூர்த்தி, திரு. ப்ரேம்ஜி, திரு. ஷிவ் நாடார், திரு. ரத்தன் டாடா, திரு. N.S. ராகவன் போன்றோர் நற்பணிகளை தங்கள் நிறுவனங்கள் மூலம் நடத்தி வருகிறார்கள். நான் கர்ணனை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இது போன்ற கொடையாளிகளுடன் அவர்கள் நிறுவனத்தில் பணி புரியும் அறிய வாய்ப்பைப்பெற்றேன். பணம் குடும்பத்தின் தேவைக்கு அதிகமாக உள்ள அனைவரும் கருத வேண்டிய வழிமுறை இது.

“பரோபகாரம் இதம் சரீரம்”. என்பது சமஸ்கிருத மொழியில் அமைந்த ஒரு நீதி வாக்கியம். இதன் பொருள்: “பிறருக்கு உதவி செய்வதற்காகவே இந்த உடல் (சரீரம்) கொடுக்கப்பட்டுள்ளது” என்பதாகும். இது சுயநலமில்லாத சேவை மனப்பான்மையை வலியுறுத்துகிறது.

நாம் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வழிமுறைகளில் (நிலைகளில்) நமது தகுதிக்கேற்றவாறு சரியானதை தேர்ந்தெடுத்து நமது பங்களிப்பை ஆற்றுவோமாக !

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *