‘விசிக கம்யூக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் தவெக!’ – ஆளுநரை சந்தித்த விஜய்!|“Vijay Meets Governor as TVK Eyes Government Formation with VCK and Communist Support”

Spread the love

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணுடன் வாருங்கள் என ஆளுநர் விஜய்யை அனுப்பிவிட, மறுநாளும் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அப்போதும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி அனுப்பி விடவே தவெக முகாம் அப்செட்டானது. இந்த சமயத்தில்தான் திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்கின்றனர் என்கிற தகவல் தீயாய் பரவியது.

தவெக விஜய்

தவெக விஜய்

இதைத் தொடர்ந்தே தவெக தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிகவினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி, மக்கள் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்த தவெகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். இறுதியாக இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியும் தனது ஆதரவை வழங்கியது.

முறையாக தவெகவுக்கு தங்களின் ஆதரவு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர். இதன்பிறகே விஜய் இப்போது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

நாளை காலை 11 மணிக்கு, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்றே ஆளுநரும் ஆட்சியமைக்க தவெக-வுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *