இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவர் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் சமாதிக்குச் சென்றிருக்கும் கவிஞர் வைரமுத்து, தமிழக அரசு பாரதிராஜவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இமயத்தைப் புதைத்த இடம் இதுதான். தூங்கு ராஜா தூங்கு, ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில்…கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள்.
மண்ணை இழுத்துப் போர்த்துப்படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ ஒன்றும் செய்யாது.