தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகம் ஆகி, தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வில்லன், ஹீரோ கதாபாத்திரம் என நடிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வருகிறார் இவர். தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த திரைப்படத்தை உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்க உள்ள குறிப்பிடதக்கது.
ஏற்கனவே ‘வணக்கம் சென்னை’, ‘காளி’, மற்றும் கடந்த ஆண்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். இந்தத் திரைப்படம் முற்றிலும் ஒரு மாறுபட்ட பான்-இந்திய அளவிலான எண்டர்டெய்னராக இருக்கும் படக்குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்குப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சுயாதீன இசையமைப்பாளராகவும், தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் ‘OfRo’ இசையமைக்கிறார். செல்வகுமார் கலை இயக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். விஜய் சேதுபதியின் திரைப்பயணத்திலேயே இது மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்த வாரம் புதுச்சேரியில் (Pondicherry) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு, கதைக்களம் மற்றும் படத்தில் நடிக்கவுள்ள மற்ற முன்னணி நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சாகர் பென்டெலா தெரிவித்துள்ளார்.



