விதவை பெண்ணுக்கு பாலிய* தொல்லை: தவெக பகுதி செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்! – Kumudam

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் விஜய் சிங்க பெண்கள் சிறப்பு காவல்படையை உருவாக்கி உள்ளார். ஆனாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறையவில்லை. மேலும் தவெக நிர்வாகிகளே தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தவெக ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் வேம்புலி என்பவர் பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுய ஆலந்தூரைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருக்கு, வேம்புலி மொபைலில் ஆபாசமாக குறுஞ்செய்தி தொடர்ச்சியாக அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக, வீட்டில் அந்தப் பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் சென்ற வேம்புலி, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டதும் வேம்புலி தப்பிச் சென்றுள்ளார்.. இதனையடுத்து, மவுண்ட் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் தவெக நிர்வாகி வேம்புலி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொல்லை அளித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த 10 ஆம் தேதி மவுண்ட் போலீசார், தவெக நிர்வாகி வேம்புலி மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வேம்புலியை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தவெக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *