“விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்” – கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!| Yuzvendra Chahal has shared his experience of overcoming a drinking habit.

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தான் சந்தித்த மதுப்பழக்க அடிமைத்தனம் மற்றும் அதிலிருந்து மீண்டு வர மறுவாழ்வு மையத்தில் (Rehab) சேர்ந்து சிகிச்சை பெற்றது குறித்து, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், “கடந்த ஆண்டு கவுண்டி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, எனது மதுப்பழக்கம் எல்லை மீறிப்போனது. நிலைமை கைமீறிச் சென்றதால், நானாகவே சென்று ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தேன்.

யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹல்

அங்கு 26 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன். அந்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றியமைத்தது. தற்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முதிர்ச்சி எனக்குக் கிடைத்துள்ளது. கடந்த ஐ.பி.எல் தொடரின் போது, என் உடல் மீண்டும் 30 வயது இளைஞனைப் போலப் புத்துணர்ச்சியோடு இருந்தது. 2011-ல் நான் முதன்முதலில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடத் தொடங்கியபோது, சிறு வயதிலேயே பார்ட்டி கலாச்சாரத்திற்குப் பழகிவிட்டேன். அப்போது ஏபி டி வில்லியர்ஸ் “வாழ்க்கையில் சமநிலை முக்கியம்’ என்று அறிவுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *