‘விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு!’- கைவிரித்த ஆனந்த்; டென்ஷனில் முதல்வர்; பரிதவிப்பில் அமைச்சர் சரத்? |Political Buzz: Anand Raises Alarm as Issue Reaches Thalapathy, CM and Gilli Sarath Under Stress

Spread the love

முதல்வரின் கடும் அப்செட்டை வைத்துதான் சரத்தை அமைச்சரவையிலிருந்து நீக்க போகிறார்கள் எனும் கருத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக பதறிப்போன சரத், மனைவி குழந்தையோடு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள ‘செண்பகம்’ இல்லத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார். ‘விளையாட்டாய் செய்ததை வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி அரசியல் ஆக்குகிறார்கள். தளபதியிடம் எடுத்துக்கூறுங்கள்’ என மனம் வருந்தி பேசியிருக்கிறார். ஆனால், பொதுச்செயலாளர் சரத்திடம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த்

‘விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு. அவர் எடுக்குறதுதான் முடிவு!’ என கறாராக கூறியிருக்கிறார். எங்கே தனது பதவி பறிபோய்விடுமோ…என்கிற பரிதவிப்பில் செண்பகம் இல்லத்தை விட்டு கிளம்பினார் சரத். அதற்கேற்றார் போல கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு கூடுவாஞ்சேரியில் முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சரத் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தலைமையின் உத்தரவின் பேரில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை’ என்றனர்.

மேலும் பேசியவர்கள், ‘திமுக இந்த விவகாரத்தை கையிலெடுத்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. இந்த நேரத்தில் சரத் மீது நடவடிக்கை என இறங்கினால் அரசியல்ரீதியாக அவர்களின் கை ஓங்கிவிடும். அதனால் 2-3 மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றத்தை செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் தரப்புக்கு சீனியர்கள் சிலர் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் இறுதி முடிவு முதல்வரின் கையிலேயே இருக்கிறது’ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *