பாலிவுட்டின் கிங் கான் `எக்காலத்திலும் சிறந்த சினிமா நட்சத்திரம்’ பட்டியலில் இடம்பிடித்த ஷாருக் கான்

Spread the love

இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் முதலிடத்தில் இருப்பது ஷாருக் கான் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு சர்வதேச அளவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது திரைப்படங்கள் மூலம் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்துள்ள ஷாருக் கான், தற்போது “எக்காலத்திற்குமான மிகச்சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ‘வெரைட்டி’ என்ற ஆன்லைன் இதழ், எல்லா காலத்திலும் சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ‘பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் ஷாருக் கான் மட்டுமே. அவர் இந்தப் பட்டியலில் 92-வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். ஷாருக் கானை பற்றி ​​அந்த சர்வதேச இணையதளம் குறிப்பிட்டுள்ள பதிவில், அவரை பாலிவுட் சினிமா ஜாம்பவான் என்று குறிப்பிட்டுள்ளது.

.

பாஸிகர் மற்றும் தார் ஆகிய படங்கள் அவருக்கு திருப்புமுனைப் படங்களாக அமைந்தன என்று அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்ததுடன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே மற்றும் தேவதாஸ் போன்ற படங்கள் அவரை காதல் நாயகன் அந்தஸ்துக்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும், இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்கள் ஷாருக் கானை ‘கிங் கான்’ என்று அழைப்பதாகவும், அவர் தனது சிம்மாசனத்தில் சௌகரியமாக அமர்ந்திருப்பதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்தது.

எல்லா காலத்திலும் மிகச்சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 நட்சத்திரங்கள்: மெர்லின் மன்ரோ, ஹம்ப்ரி போகார்ட், சார்லி சாப்ளின், ஜாக் நிக்கல்சன், கேத்தரின் ஹெப்பர்ன், சிட்னி பொயட்டியர், மார்லன் பிராண்டோ, டாம் குரூஸ், தோஷிரோ மிஃபுனே மற்றும் பார்பரா ஸ்ட்ரைசண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *