சொந்த வீடு கட்டும்போது பிளான் போட்ட பட்ஜெட்டை விட, அதிகமாகச் செலவாவதையே நாம் பார்த்திருப்போம். இது பெரும்பாலும் நிதர்சனமான உண்மைதான்.
“ஒரு கட்டிடம் எந்தத் தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றால், அதன் அடிப்படை நிதித் திட்டமிடல்தான் முக்கியம்.
பட்ஜெட்டை மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

1. கட்டுமானத்திற்கு முந்தைய செலவுகள்: கட்டிட வரைபடம், ஸ்ட்ரக்சரல் டிசைன், எலிவேஷன் டிசைன், மண் பரிசோதனை மற்றும் கட்டிட அனுமதி பெற ஆகும் செலவுகள்.
2. கட்டுமானத்தின் போது ஆகும் செலவுகள்: அஸ்திவாரம் முதல் ஃபினிஷிங் வரை நேரடியாக ஆகும் கட்டுமானச் செலவுகள்.
3. கட்டுமானத்திற்குப் பிந்தைய பராமரிப்புச் செலவுகள்: வீடு கட்டி முடித்த பின் ஆகும் பராமரிப்புச் செலவுகள்.
ஆனால், பொதுவாக மக்கள் வீடு கட்ட பட்ஜெட் போடும்போது, சம்ப் தொட்டி கட்டுவது, பெயிண்டிங், லைட்டிங் போன்ற விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகிறார்கள்.