Woman files three separate nomination papers for a single post—representing the Congress, the BJP, and as an independent candidate.-ஒரு பதவிக்கு 3 கெட்டப்பில் வந்து 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பெண்

Spread the love

தேர்தலில் ஒருவர் ஒரு கட்சி சார்பாக போட்டியிடுவது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் ஒரு பெண் மூன்று கட்சிகள் சார்பாக ஒரே பதவிக்கு போட்டியிட்டு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அங்குள்ள பிரஜ்நகர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வத்தி குமாரி என்ற பெண் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் கையெழுத்திடும் போது அவர் சிவப்பு நிற புடவையில் வந்து முகத்தை மூடியபடி வந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தனது ஆடையை பச்சை நிற சல்வார் சூட் ஆக மாற்றி, அதன் “துப்பட்டா’வால் முகத்தை மூடிக்கொண்டு, எம்.எல்.ஏ ஜவஹர் சிங் பெத்தம் முன்னிலையில் பாஜக வேட்பாளராக இரண்டாவது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அடுத்த சிறிது நேரத்தில் மூன்றாவது முறையாக, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, அப்பெண் மஞ்சள் நிற சேலையில் முகத்தை மூடாமல் வந்திருந்தார்.

முன்னதாக பிரஜ்நகர் பஞ்சாயத்து சமிதி தலைவராக பணியாற்றிய பெண்ணின் மாமனார் அர்ஜுன் பிரதான் தேர்தல் ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். அவர் மூன்று கட்சி சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை யாரும் கவனிக்கவில்லை. தேர்தலில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டதில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறோம் என்று கூறி அவரை தங்களது கட்சி உறுப்பினர் என்று பா.ஜ.க உரிமை கோரியது.

ஒரு கட்சியின் சீட்டில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று கருதி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் ஒரே பதவிக்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சுயேச்சை என மூன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் ஒரு வார்டு அல்லது தொகுதிக்கு நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம், ஆனால் அவர்கள் ஒரு அரசியல் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால் விதிகளை மீறி 3 கட்சிகள் சார்பாக குமாரி போட்டியிட்டுள்ளார்.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *