வெறும் 20 வயசு தான்.. எல்லை தாண்டி இந்தியா வந்த பாகிஸ்தான் இளைஞர்! காஷ்மீர் மக்கள் செய்த சம்பவம் | Pakistan man arrested after illegal entry to Jammu Kashmir border, locals caught him

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், 20 வயது நிரம்பிய பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தார். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் உடனடியாக அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவரது பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

pakistan-man-arrested-after-illegal-entry-to-jammu-kashmir-border-locals-caught-him

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி ஊடுருவல் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக ஜம்முகாஷ்மீரில் உள்ள ஆர்எஸ்புரா செக்டாருக்கு உட்பட்ட அர்னியா துணை செக்டார் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதி செல்லுகிறது.

இங்கு அடிக்கடி ஊடுருவல் முயற்சி நடந்து வருகிறது. தற்போது சாய் கல்யான் மார்க் என்ற இடத்தில் உள்ள ஹரபீர் பிரிகேட் மேம்பாலத்தின் பக்கத்தில் இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அங்கிருந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

இதனால் பொதுமக்கள் அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானில் உள்ள லய்யா மாவட்டத்தின் ஜனரவாலா பகுதியில் உள்ள பஸ்தி கோகால் பகுதியை சேர்ந்த. இமாத் உசேன் என்பவரின் மகன் அவாஸ் ராசா (வயது 20) என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரித்தபோது மாறுபட்ட விவரங்களை கூறினார். அடிக்கடி தனது தகவல்களை மாற்றி மாற்றி சொல்வதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் எப்படி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தார்? வழிதெரியாமல் இந்தியாவிற்குள் வந்தாரா? எல்லையோர கண்காணிப்பை சோதனை செய்ய உள்ளே வந்தாரா? இல்லாவிட்டால் உள்நோக்கத்துக்குள் இந்தியாவிற்குள் நுழைந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது எல்லையில் ஊடுருவல் நடந்த அர்னியா – ஆர்எஸ் புரா ஏரியாவில் சமீபத்திலும் பல ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதன்படி செப்டம்பர் 11ம் தேதிகதுவாவில் போபியா ஏரியாவில் பாகிஸ்தானை சேர்ந்த 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டார.

அதற்கு முன்பாக செப்டம்பர் 8 ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த சிராஜ்கான் என்பவர்அக்ரோய் அவுட்போஸ்ட் பகுதியில் நுழைய முயன்று எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். முன்னதாக செப்டம்பர் 3ம் தேதி பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் லுனி கிராமத்தை சேர்ந்த நாசீர் என்பவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இப்படியாக தொடர்ந்து இந்த பகுதிகளில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஊடுருவி வருகின்றனர். இதனால்தற்போது ஊடுருவிய அவாஸ் ராசாவின்பின்னணி பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *