Dhanush: "நான் Chef ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்; ஆனால்…" – தனுஷ் ஷேரிங்

Spread the love

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓம்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்று (நவ.19) ‘CNN-News18’ ஊடகம் நடத்திய விருது விழாவில் ‘Indian Of The Year 2026’ விருது தனுஷிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விருது விழாவில் தனுஷும் அவரது மகன்கள் இருவரும் கலந்துகொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “என் மகன்கள்தான் எனக்கு எல்லாமே. அவர்களும் என்னைப் போலவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள். நான் எதைச் செய்தாலும், அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்கிறேன்.

தனது மகன்களுடன் தனுஷ்
தனது மகன்களுடன் தனுஷ்

ஏனென்றால், எதிர்காலத்தில் இந்தப் பையன்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இன்று நான் அவர்களைப் பெருமைப்படுத்தினால்தான், நாளை அவர்களிடமிருந்து அதை என்னால் உரிமையோடு கேட்க முடியும்.

கடவுள் எப்போதும் நமக்காக ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரை நம்பி முழுமையாகச் சரணடையுங்கள், உங்களுக்கு எது சிறந்தது என்பது கடவுளுக்கு நிச்சயம் தெரியும். நான் சமையல் கலைஞராக ஆக விரும்பினேன், ஆனால் தற்செயலாக நடிகனாகிவிட்டேன்.

இப்போது எனக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ, என்னைத் தேடி என்னவெல்லாம் வருகிறதோ, அவை அனைத்தும் என் பெற்றோரின் பிரார்த்தனை, என் ரசிகர்களின் ஆதரவு மற்றும் மகாதேவனின் ஆசீர்வாதத்தால் மட்டுமே கிடைத்தவை. இதற்கு நான் எந்தப் பெருமையையும் எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விருதைப் பெறுவதில் நான் உண்மையிலேயே பெருமையடைகிறேன்.

தனுஷ்
தனுஷ்

நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. தற்செயலாக, அடுத்த ஆண்டு நான் திரையுலகிற்கு வந்து 25-வது ஆண்டாகும். அந்தச் சிறப்புக்கு மகுடம் வைத்தாற்போல் இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளது. நான் உண்மையிலேயே நெகிழ்ச்சியோடும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் தனுஷ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *