தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.35 கோடிக்கு பேரம் பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனுவை அளித்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜா.
இந்த வழக்கை விசாரித்ததில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை தேடி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, “லுக் அவுட் நோட்டீஸ்’ வழங்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
