ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் – நடப்பது என்ன? | Why are Moroccans fleeing to Spain?

Spread the love

ஐரோப்பிய அரங்கில் வெடித்த மோதல்

சியூட்டா எல்லையில் நடந்த சம்பவம் விரைவில் ஐரோப்பிய அரசியல் விவாதமாக மாறியது. இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனியோ தஜானி (Antonio Tajani), ஸ்பெயினை தற்காலிகமாக “ஷெங்கன்’ (Schengen) ஒப்பந்தத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் (Giorgia Meloni) இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஸ்பெயின் அரசு, இத்தாலி தூதரை அழைத்து அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்ததுடன், அந்தக் கருத்துகளை ஏற்க முடியாதவை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

ஸ்பெயின் – மொராக்கோ எல்லை

இந்தச் சூழலை ஐரோப்பிய ஆணையமும் (European Commission) உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையெனில் ‘ப்ரான்டெக்ஸ்’ (Frontex) மூலம் உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மொராக்கோவுடன் இணைந்து சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தவர்களை விரைவாகத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் ஸ்பெயின் தீவிரப்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் - மொராக்கோ எல்லை

ஸ்பெயின் – மொராக்கோ எல்லை
Antonio Sempere

பின்னணியும் எதிர்காலச் சவால்களும்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சியூட்டா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நில வழி எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும், 2021-ஆம் ஆண்டு 8,000-க்கும் மேற்பட்டோர் குறுகிய காலத்தில் எல்லையைக் கடந்த சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி, குடியேற்ற மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஷெங்கன் ஒப்பந்தத்தின் செயல்திறன் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம், ஒரு சாதாரண எல்லை மீறல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த குடியேற்றக் கொள்கைக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது,.

ராணுவத்தைக் கொண்டு எல்லையை மூடினாலும், பாதுகாப்பு வேலிகளை உயர்த்தினாலும், ஐரோப்பாவின் வாசலில் காத்துக்கிடக்கும் இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு என்ன? இது ஸ்பெயினின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பாவும் சிந்திக்க வேண்டிய ஒரு சிக்கலான கேள்வி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *