வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

Spread the love

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று தனது தாத்தா, பாட்டியிடம் கூறியுள்ளார்.

இது குறித்து, சிறுமியின் உறவினர், சிங்கப்பெண் அதிரப்படை போலீஸாரை `1091’ என்ற அவசர உதவி எண் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்
கைது செய்யப்பட்ட இளைஞர்

அந்த பகுதிக்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸார், சிறுமியிடம் அத்துமீறிய பாலாஜியைத் தேடிப்பிடித்து கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பாலாஜியை வேலூர் மத்தியச் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *