“ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் இந்த ஆட்சி நீடிக்காது…” – அதிமுக ராஜேந்திர பாலாஜி சொல்வது என்ன? | “If Stalin gets angry, this government won’t last…” – What does AIADMK’s Rajendra Balaji say?

Spread the love

சிவகாசி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “இந்த நாடு உங்களுக்கென எழுதி கொடுக்கப்பட்டதா? எந்த நேரம் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ அப்போது உங்கள் ஆட்சி முடிந்துவிடும்.

கோபம் வரும்… இன்னும் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வரப் போகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த ஆட்சிக்கு இன்னும் இரண்டு வருடம் குறையும். ஆட்சியே நிலையில்லாமல் இருக்கும்போது கரூரில் வந்து இப்படி பேசலாமா? அதிமுக – திமுக என யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம். ஆனால் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரு முதல்வருக்கான மாண்புடன் பேசாமல் இப்படி நடந்துகொள்ளலாமா? இதுபோல ஒரு பேச்சை வரலாற்றில் கேட்டதுண்டா?

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

அறிஞர் அண்ணா முதல் இப்போது ஸ்டாலின் வரை பார்த்துவிட்டோம். இவரைப்போல ஒரு முதல்வரின் பேச்சை கேட்டிருக்கிறோமா? இப்படி வசைபாடி பேசியிருக்கிறார்களா? தவறு நடந்திருக்கிறது என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும். உரிய சட்டத்துறை நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் முதல்வரே இப்படி பேசுகிறார் என்றால் அவர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றுதானே அர்த்தம்?

எடப்பாடி பழனிசாமி நம்மைவிட அதிகமாகப் புகழ்ந்தவர்கள் தான் இன்று அதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வப்போகிறார்கள்.” எனப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *