ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா… எடை குறையுமா? | Is a ripped physique possible by taking steroids… Will it reduce weight?

Spread the love

பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை  (External Substances) எடுத்துக்கொள்வது  அவர்களுக்கு அவசியமாகிறது.

பாடி பில்டர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், அறிவியல்பூர்வமாக, இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாடி பில்டரின்  உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் “ஃபிளஷிங் அவுட்’ (Flushing Out) என்ற செயல்முறையையும் மேற்கொள்வார்கள். 

இதன் மூலம் உடலில் உள்ள ஸ்டீராய்டு பொருள்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். இந்தச் செயல்முறைக்கென்று ஒரு குறிப்பிட்ட காலம் (Time) உள்ளது. இதைப் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் சென்றால், அவர்கள்  சரியாக வழிநடத்துவார்கள்.

பாடி பில்டரின்  உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும்,  பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் 'ஃபிளஷிங் அவுட்' (Flushing Out) என்ற செயல்முறையையும் மேற்கொள்வார்கள்.

பாடி பில்டரின் உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் ‘ஃபிளஷிங் அவுட்’ (Flushing Out) என்ற செயல்முறையையும் மேற்கொள்வார்கள்.
AI image

இதைப்பற்றி எதுவுமே தெரியாமல், மற்றவர்கள்  ஸ்டீராய்டு எடுக்கிறார்கள், இதன் மூலம் சீக்கிரமாக எடையைக் குறைக்கிறார்கள் (Weight Loss) என்று நீங்களாகவே எடுத்தால், உடல்நல பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

அப்போதுதான் ஸ்டீராய்டு ஆபத்தாக மாறுகிறது. ஏனெனில், அந்த ஸ்டீராய்டை  உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்பதும், அதனை எந்த அளவு எடுக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *