ஹனிமூனுக்கு கிளம்பிட்டாரா? 72 வயது மலேசிய லெஜெண்ட் அப்தா அலிஃப்.. அப்ப அந்த 20 வயது பெண் யார்? | Honeymoon Rumours.. 72-Year-Old Malaysian Football Legend Abdah Alif Marries 20-Year-Old Woman.. Who Is She?

Spread the love

International

oi-Hema Vandhana

கோலாலம்பூர்: மலேசிய கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் ஃபேமஸான பெயர் டத்தோ அப்தா அலிஃப். 1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மலேசிய கால்பந்தின் பொற்காலத்தில் தேசிய அணிக்காக விளையாடிய இவர், இப்போது மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார்.. காரணம், தன்னுடைய 72-வது வயதில் இப்போது திருமணம் செய்துள்ளார்.. இதை பற்றின பேச்சுதான் சோஷியல் மீடியா முழுக்க பரவி வருகிறது..!!

மலேசிய கால்பந்தின் பொற்காலத்தில் தேசிய அணிக்காக விளையாடியவர் 72 வயதான அப்தா அலிஃப். 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கிற்கு மலேசியா தகுதி பெற்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய அந்த அணியில் விளையாடிய பெருமையும் அவருக்கு உண்டு.

Abdah Alif Malaysia Marriage

மலேசியா கால்பந்து வீரர்

ஆனால், ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியம் நடத்திய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா அந்த ஒலிம்பிக்கை புறக்கணித்ததால், தகுதி பெற்றும் அப்தாவால் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முடியவில்லை.

இப்போது பல வருடங்களுக்கு பிறகு அப்தா அலிஃப் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். ஆனால், கால்பந்துக்காக அல்ல.. தனது 72-வது வயதில் திருமணம் செய்துகொண்டதற்காக..!

அப்தா அலிஃபின் திருமணம்

அப்தா அலிஃபின் திருமணம் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மலேசியாவின் மலேசியாவின் கோலா டெரங்கானுவில் நடைபெற்றுள்ளது. 72 வயதில் கல்யாணம் செய்துகொண்டார் என்பது ஆச்சரியம் என்றால், அவரை கல்யாணம் செய்துகொண்ட பெண்ணுக்கு சுமார் 20 வயது என்பது மற்றொரு ஆச்சரியமான தகவலாகும்.. அதாவது 2 பேருக்கும் இடையே சுமார் 52 வருடங்கள் வயது வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமணம்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த கல்யாண போட்டோக்கள் இணையத்தில் பரவிய பிறகுதான், பலருக்கும் அப்தா அலிஃப் திருமணம் செய்துகொண்ட விஷயமே தெரியவந்தது.

போட்டோக்களில், அப்தா அலிஃபும் அவரது புதிய மனைவியும் திருமண அலங்காரத்தில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.. இதை பார்த்ததுமே, “யார் இந்த பெண்?”, “திருமணம் உண்மையிலேயே நடந்ததா?” என்றெல்லாம் கேள்விகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி

இதனிடையே, அப்தா அலிஃபின் முன்னாள் சக வீரர் ஒருவரும், இந்த கல்யாண போட்டோ உண்மைதான் என்று உறுதி செய்துள்ளார். அதேபோல அப்தா அலிஃபின் தம்பியும் முன்னாள் மலேசிய தேசிய கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான டத்தோ யூனுஸ் அலிஃப்-யும் இந்த திருமணத்தை உறுதி செய்துள்ளார்.. ஆகஸ்ட் 27-ம் தேதி இந்த திருமணம் நடைபெற்றதாகவும், இரு குடும்பங்களின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் இந்த திருமணம் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய வயது வித்தியாசம் இருந்தாலும் குடும்பத்தினர் இந்த திருமணத்தை எதிர்க்கவில்லை.. மாறாக, அப்தா அலிஃபின் குடும்பத்தினர் திருமணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். “எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம். அப்பா, உங்களுக்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..

இந்த கல்யாண தகவல் வெளியானதுமே, அப்தா அலிஃபை தொலைபேசியில் தொடர்புகொள்ள மீடியாக்கள் முயன்றுள்ளன. ஆனால் அவர் போன் அழைப்புகளை எடுக்கவில்லையாம்.. இதுகுறித்து அவரது தம்பி யூனுஸ் அலிஃபிடம் கேட்கப்பட்டபோது, அப்தா தனது புதிய மனைவியுடன் நேரத்தை செலவிட்டு வருவதாகவும், 2 பேரும இப்போது ஹனிமூனில் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

யார் இந்த 20 வயது மணப்பெண்

ஆனால், யாரிந்த மணப்பெண் என்றுதான் தெரியவில்லை.. அப்தா அலிஃபின் இந்த புது மனைவியைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் அதிகமாக வெளியாகவில்லை.

ஒரு காலத்தில் மலேசிய கால்பந்து அணிக்காக மைதானத்தில் களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அப்தா அலிஃப், இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய தொடக்கத்தால் மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார். 72 வயதில் திருமணம் செய்துகொண்ட அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவும் கிடைத்துள்ள நிலையில், இந்த திருமணம்தான் தற்போது மலேசிய சமூக வலைதளங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *