ஹரியானா ஏடிஎம் கொள்ளைப் பள்ளி: தமிழக போலீஸ் அம்பலப்படுத்திய பகீர் பின்னணி! Haryana ATM Heist Training School: How TN Police Busted the Mewat Gang

Spread the love

நள்ளிரவு நேரம்… ஆள் நடமாட்டமற்ற அமைதியான சாலைகள்… கண்ணிமைக்கும் சில நிமிடங்களில் ஏடிஎம் மையங்களுக்குள் நுழையும் மர்ம நபர்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல லட்சம் ரூபாய்களோடு மாயமாகி விடுகிறார்கள்.

காவல்துறையினருக்கு எந்தவொரு தடயமும் சிக்குவதில்லை; சிசிடிவி கேமராக்கள் இயங்குவதில்லை; அலாரங்கள் ஒலிப்பதில்லை. எப்படித் திருடினார்கள், எப்படி மாட்டிக் கொண்டார்கள் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லும் க்ரைம் ஸ்டோரிதான் இது!

சென்னையிலும், அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் நடந்த அடுத்தடுத்த தொடர் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் தமிழகக் காவல்துறையைத் தலைசுற்ற வைத்தன.

இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, விசாரணையை ஆழமாக முன்னெடுத்தபோதுதான் நாட்டின் அதிபயங்கர நெட்வொர்க் ஒன்று அம்பலமானது. அதுதான் ஹரியானாவின் மேவாட் பகுதியில் இயங்கி வந்த ஏடிஎம் கொள்ளைப் பள்ளி (ATM Heist Training Academy).

ஏடிஎம் கொள்ளை

ஏடிஎம் கொள்ளை

கொள்ளைச் சம்பவங்களின் பின்னணி

2021ல் சென்னையின் வேளச்சேரி, பெரம்பூர், தரமணி ஆகிய பகுதிகளில் ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது முதல், 2023ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் தகர்த்து ₹75 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டது வரை தொடர் குற்றங்கள் பதிவாகின.

கொள்ளையர்களின் செயல்முறை

  • ஏடிஎம் பூத்துக்குள் நுழைந்தவுடன் முதலில் சிசிடிவி லென்ஸ்கள் மீது கருப்பு ஸ்ப்ரே அடிப்பார்கள் அல்லது வயர்களை வெட்டுவார்கள்.

  • இயந்திரத்தின் அலாரம் அல்லது ஜிபிஎஸ் சென்சார் செயல்படாதபடி சில விநாடிகளில் மின் இணைப்பைத் துண்டிப்பார்கள்.

  • கேஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை வெட்டும்போது, உள்ளிருக்கும் ரூபாய் நோட்டுகள் கருகிவிடாத அளவுக்கு இயந்திரத்தின் குறிப்பிட்ட “கேஷ் செஸ்ட்’ பகுதியை மட்டுமே மிகத் துல்லியமாக அறுத்து எடுப்பார்கள்.

  • ஒரு ஏடிஎம்மில் நுழைந்து பணத்தை அள்ளிவிட்டு வெளியேற அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 8 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *