ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா செய்த வேலை.. ஈரான் கடும் எச்சரிக்கை.. இஸ்ரேலை தாண்டி புது பிரச்சனை! | Iran Rejects US-Backed Omani Route in Strait of Hormuz, Warns Ships Will Be Targeted; Tensions Escalate

Spread the love

International

oi-Prasanna Venkatesh

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், வளைகுடா நாடுகளில் இருந்து அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேற வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் ஓமான் நாடு அறிவித்த மாற்று வழியை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளது.

இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்களை ஈரான் நிறுத்தி, தாக்குதல் நடத்தும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை உண்மையாக்கும் விதமாக சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஓமானின் வழித்தடத்தை ஈரான் நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இயக்கிய காரணத்தால் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது பெரும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

Iran oman Hormuz Trump USA Iran Strait of Hormuz IRGC Navy Hormuz warning Oman alternative route Hormuz US backed Hormuz route Iran rejects Hormuz bypass Strait of Hormuz tensions 2026 Hormuz shipping route dispute Iran attacks ship Hormuz Channel 16 Hormuz coordination Hormuz oil route crisis IRGC 2026 Channel 16

ஈரானின் கடும் எதிர்ப்பு

ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்துக்கு ஓமான் பக்கம் மாற்று வழியை அமெரிக்காவின் ஆதரவுடன் ஓமான் அறிவித்திருந்தது. இந்த வழி ஈரானின் கட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டதாக ஈரான் கருதுகிறது. இதை ஈரான் “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடம்” என்று எச்சரித்தது.

ஈரானின் IRGC கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் அறிவித்த வழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவை. இதற்கு வெளியே செல்லும் கப்பல்கள் அனைத்தும் நிறுத்தப்படும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும்

ஈரான், ஹார்முஸ் நீரிணையில் செல்லும் அனைத்து கப்பல்களும் தான் அறிவித்த வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு வெளியே செல்லும் எந்தவொரு கப்பலும் “கண்டிப்பாக தாக்குதலை சந்திக்கும்” என்று அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து கப்பல்களும் Channel 16 என்ற அலைவரிசை மூலம் ஈரானுடன் கட்டாயம் ஒருங்கிந்து பயணிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவை நிறுத்தப்பட்டு டார்கெட் செய்யப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கை விடுத்த பின்பு தான் சிங்கப்பூர் இந்த மாற்று வழித்தடத்தை பயன்படுத்தியது. இதன் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகி தற்போது, ஓமான் நாட்டில் இருந்து 7.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தரைதட்டி நிற்கிறது.

ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இப்பதையை ஈரான் முழுமையாக கட்டியாள வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது. இந்த இலக்கிற்கு தடையாக வரும் ஓமான் வழித்தடத்தை முடக்கவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேவேளையில் தான் அமெரிக்கா – ஈரான் மத்தியில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இதனால் இத்தாக்குதலும், ஓமான் வழித்தடத்திற்கு அமெரிக்கா கொடுத்த ஒப்புதலும் பெரும் பிரச்சனையாக வெடிக்க வாய்ப்புள்ளது.

ஈரானின் இந்த எச்சரிக்கையும், நிலைப்பாடும், ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஈரான் தனது கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் எக்காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்காது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் பேச்சுவார்த்தை முடிந்த பின்பு டோல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது தான் ஈரானின் திட்டமாக உள்ளது. தற்போது ஓமான் வழி இந்த திட்டத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால் ஈரான் படைகள் சிங்கப்பூர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *