ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்: உலகம் எண்ணெய் நெருக்கடியை சமாளிப்பது எப்படி?|Hormuz Closed, But the World Found Ways to Keep Oil Flowing

Spread the love

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது.

ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் காட்டாமல், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துக்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது… இன்னும் செய்து வருகிறது.

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டு எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்னும் அதன் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை.

ஹார்முஸ் நீர்சந்தி தற்போதும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. ஆனால், முன்பு போல இல்லாமல், இப்போது உலக நாடுகள் இந்தச் சூழலைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

> ஆகஸ்ட் 30-ம் தேதிதான், ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கடுமையான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின. ஆனால், அதற்குள் அந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 8-9 மில்லியன் பேரல் எண்ணெய்கள் கடந்துவிட்டன. இது உலக நாடுகளுக்குத் தற்போது உதவி வருகிறது.

மேலும், அதன்பிறகும், ஈரான் அனுமதித்த கப்பல்கள் அவ்வப்போது நாளுக்கு 2 மில்லியன் பேரல் எண்ணெய் என்று ஹார்முஸைக் கடந்திருக்கிறது. ஆனால், இப்போதும் இந்தப் போக்குவரத்து நடக்கிறதா என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *