ஹெச்-1பி விசா என்பது பொதுவாக வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவது ஆகும். அமெரிக்கர்கள் செய்ய முடியாத வேலையாக இருந்தால் மட்டுமே ஹெச்-1பி விசா வெளிநாட்டினருக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் இத்தகைய ஏற்பட்டைச் செய்தது ட்ரம்ப் அரசாங்கம்.
ட்ரம்ப் அரசாங்கத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியினர் வழக்கு தொடுத்தனர்.
“ஹெச்-1பி விசா என்பது அபராதம் அல்ல. அது ஒரு வரி. ஆனால், அந்த விசா கட்டணத்தை உயர்த்த ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் அனுமதியைப் பெறவில்லை.
இதனால், அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பால் இதை நடைமுறைப்படுத்த முடியாது.
இந்த உயர்வு என்பது ட்ரம்பின் அதிகார வரம்பைத் தாண்டியது. இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பொதுத்துறைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தக் கட்டண உயர்வு சட்டத்திற்குப் புறம்பானது” என்று தீர்ப்பளித்தார்.